திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (13:15 IST)

பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில்  தெற்கு தொகுதி  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து இன்று ஒரு இளைஞரை வெளியே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த இளைஞர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்திற்குள் நுழைந்து உள்பக்கமாக தாழிட முயன்றதாகக் கூறி, அந்த இளைஞரை அங்கிருந்த உதவியாளர் வெளியே தள்ளியுள்ளார்.

இதையடுத்து, உயிரிழந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.