குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது? அமைச்சர் பதில்!’
திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் தொடர்பான அரசாணை விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக பேசியுள்ள திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ‘அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.