செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (21:34 IST)

உதயநிதியிடம் இன்று நிவாரண நிதி வழங்கியோர் விபரங்கள்!

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி அவர்களிடம் இன்று நிதி வழங்கியவர்கள் குறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
சென்னை ஆதம்பாக்கம், மதன் ஹோமியோ கிளினிக் உரிமையாளர் Dr.N.R.ஜெயக்குமார் மற்றும் திருவொற்றியூரையைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் இணைந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு நன்றி.
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரர் ஜெகதீசன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய Gowtham Traders நிறுவனம் சார்பில் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, ஜவஹர் ஹுசைன் கான் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் - ஹபிதா பேகம் தம்பதியின் மகன் முகமது நிஹான் (10) தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார்.தம்பிக்கு நன்றி