டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேடு; ”எனக்கும் அதற்கும் தொடர்பில்லை”; இடைத்தரகர் மனு
இடைத்தரகர் ஜெயக்குமார்
டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த இடைத்தரகர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைக்கேடு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். சரணடைந்த ஜெயக்குமாரை பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவலில் வைக்கவுள்ளனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
