செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:09 IST)

”அவர் மட்டுமல்ல, அதிமுகவில் பலரும் இப்படித்தான்”.. வறுத்தெடுக்கும் ஸ்டாலின்

முக ஸ்டாலின்

திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல, அதிமுகவில் பல அமைச்சர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடந்த யானைகள் முகாமை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது முகாமை பார்வையிட்டபோது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக்கொண்டது.

அங்கே இருந்த ஒரு பழங்குடியின சிறுவனை அழைத்து, தனது செருப்பை கழற்றச் சொன்னார் அமைச்சர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “அமைச்சர்கள் பலர் திண்டுக்கல் சீனிவாசனைப் போல் தான் நடந்துக் கொள்கிறார்கள். தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்” என விமர்சித்துள்ளார்.