கொரோனா சிகிச்சைக்காக... எங்கள் திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைக்கிறேன் - வைரமுத்து
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்துவருகின்றா தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது :
தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்படைந்துள்ளனர்.இதுவரை 19 பேர் கொரோனாவில் இருந்து மீட்கபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம் என தெரிவித்துள்ளார்.