வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (18:48 IST)

தமிழகத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா – பீலா ராஜேஷ் அறிவிப்பு !

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொரோனா 12 லட்சம் பேருக்குப் பரவி தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2300க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது. இதை சற்று முன்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழகம் கொரோனா தொற்றால் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் இதுவரை 63,0000 க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.