’’ அரசு, உழவர்களின் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்’’ - ராமதாஸ் டுவீட்
Sinoj|
Last Updated:
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:46 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவது என்பது தெரிந்ததே. இன்று ஒரே நாளில் 600-க்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கினால் பல்வேறு தொழில்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உழவர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என பாமக தலைவர்,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆள் பற்றாக்குறை காரணமாக இயங்காததால் நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி உழவர்களின் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்!