1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I disagree with Thirumavalavan standpoint, says Seeman

திருமாவளவன் உடன் எனக்கு உடன்பாடில்லை - சீமான் அதிரடி

சீமான்
பாஜகவிற்கு மாற்றாக காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்ற திருமாவளவன் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


 

சென்னை லயோலா கல்லூரியில் செய்தியாளர்களிடத்தில் பேசிய சீமான், ”காங்கிரஸ் பாஜகவிற்கு மாற்றாக இந்தியாவில் ட்ரம்ப் போல ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜகவிற்கு மாற்றாக காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்ற திருமாவளவன் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

பிரதமரின் அறிவிப்பு அவசர கதியில் அறிவித்த அறிவிப்பு. மக்கள் பழைய இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 15-20 வருடங்கள் ஆகும். பிரதமர் அறிவித்த உடன் வரவேற்பு தெரிவித்தவர்கள் தற்போது பதறிப் போய் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கிறார்கள்.

இருப்பினும் அவர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு அளிக்கிறது. நோட்டை மாற்றுவதால் நாட்டை மாற்ற முடியாது. தாளை மாற்றுவதில் பயனில்லை. தத்துவத்தை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
About Writer
லெனின் அகத்தியநாடன்