1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I am ready to work with DMK says Dinakaran

திமுகவுடன் இணைய தயார்: டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

dinakaran
பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக திமுக உள்பட எந்த கட்சியுடனும் இணைந்து போராட்டம் நடத்த தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் அறிவித்துள்ளார். இதனையடுத்து வரும் தேர்தலிலும் திமுகவுடன் தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடிய  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை சற்றுமுன் நேரில் சந்தித்த டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கவே இங்கு வந்ததாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் மக்கள் நலனை கருதி திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியின் போராட்டத்திலும் கட்சி பேதமின்றி இணைந்து போராட தயார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்க டிடிவி தினகரன் திமுகவுடனும் கூட்டணி வைக்க தயங்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
அடுத்த கட்டுரையில்
உடலில் தீ வைத்துக்கொண்டு 3 வது மாடியிலிருந்து குதித்த ஐ.டி,ஐ மாணவர் பலி