1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hydrocarbon Carbon Protest withdraw at Kottaitkaadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கோட்டைக்காடு போராட்டம் வாபஸ்

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஈடுப்பட்டுள்ளனர்.
 
பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் ஹைட்ரோ கார்பன திட்டம் பாதுக்காப்பனது என மத்திய அரசுக்கு ஆதரவாக குறல் கொடுத்து வருகின்றனர். நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பனை திட்டத்தை நிறுத்த மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
 
இதையடுத்து அரசு சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டது. மேலும் நெடுவாசல் மக்கள் போரட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார். 
 
ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் முழுமையாக இந்த திட்டத்தை ஒழிக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி இன்று 17வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் போராடி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தையை நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Abimukatheesh