தொடர்புடைய செய்திகள்
- கணவன் மனைவி தகராறு – குறுக்கே வந்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம் !
- மனைவிக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்திய கணவன் – பின்பு அதுவே வினையான விபரீதம் !
- மாமனார் வீட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...ஜோதிகா வீட்டில் இத்தனை பேரா..!
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாமனார் நெஞ்சுவலியால் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல் !
- நீ இல்லைனா நான் செத்திடுவேன்!: நாட்டு வெடிக்குண்டை கழுத்தில் மாட்டி வந்த கணவர்
என் தந்தையோடு முதலிரவு நடத்திக்கொள் – 6 மாதமாகக் காத்திருந்த மனைவியை அதிரவைத்த கணவன் !
விருதுநகரில் 4 மாத காலமாக முதலிரவு நடக்காத நிலையில் அதுபற்றி கேட்ட மனைவிக்கு கணவன் தந்தையுடன் முதலிரவை நடத்திக்கொள் என சொல்லியுள்ளார்.
விருதுநகர், மாவட்டத்தைச் சேர்ந்த மூக்காண்டி மகன் பழனிவேல் என்கிற சரவணனுக்கும் திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31) கடந்த இந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் அன்று முதல் இப்போது வரை மணமக்களுக்கு முதலிரவு நடக்கவில்லை. மாப்பிள்ளையும் பெண்ணிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த பானு ஒரு கட்டத்தில் இதுபற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தன்னுடைய சம்மந்தி வீட்டில் இதுபற்றி விசாரிக்க அவர்களோ ‘வருடக்கணக்கில் கூட முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார். அதற்குள் என்ன அவசரம்’ எனத் திமிராகப் பேசியுள்ளனர். இது சம்மந்தமாக பானு, தன் கணவரிடம் சொல்ல அவரோ ‘ எனது தந்தை சொன்னதால் தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன். வேண்டுமானால் அவருடன் முதலிரவு நடத்திக்கொள். என்னைத் தொந்தரவு செய்யாதே.மீறி தொந்தரவு செய்தால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பானு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்துள்ளனர்.
