1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Husband and wife killed in erode

பட்டாசு வெடித்த தகராறில் கணவன் மனைவி வெட்டிக்கொலை – ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு
ஈரோட்டில் பட்டாசு வெடித்த தகராறில் கணவன் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மற்றும் அருக்காளி தம்பதியினர். இவர்களின் மகள் மேனகா தீபாவளியைக் கொண்டாட கணவரோடு தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஊர் எல்லையில் மேனகா மீது பட்டாசு கொளுத்தி போட்டு இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த ராமசாமி மற்றும் அருக்காணி இருவரும் அவர்களிடம் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று காலை அரிவாள் வெட்டு காயங்களுடன் ராமசாமி மற்றும் அவரது மனைவி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். இதனால் போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொலைவழக்கில் சந்தேகத்துக்கு இடமாக உள்ள 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.