திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (20:40 IST)

இந்துக்களுக்கும் தேசத்திற்கும் எதிராகச் செயல்படும் டுவிட்டர் - கங்கனா ரணாவத் குற்றச்சாட்டு

நடிகை கங்கனா ரனாவத் மீடியாக்களில் அதிகளவு மக்களால் உச்சரிக்கப்படும் பெயராக மாறிவிட்டார்.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக பாலிவுட்டில் சிலருக்கு எதிராகக் கருத்துகளை கூறிய கங்கனா, மும்பை அரசுக்கு எதிராகக் கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கினார். அடுத்து விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,  அவர், டுவிட்டர் தளம் இந்து மதத்தினருக்கு எதிராகவும் தேசத்திற்கு எதிராகச் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும் , இந்தியாவில் டுவிட்டர் தளத்திl தடைவிதித்தால் அதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் மேப், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரை சீன தேசத்தில் இருப்பதுபோல் காட்டியது பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன். மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.