1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (09:27 IST)

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிச்சா ஜெயில் தான்...

அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை என அறிவிப்பு. 
 
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக மக்கள் கன ஜோராய் தயாராகி வரும் நிலையில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகள் தவிர ஏனைய பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2018 ஆம் அண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்து வருகிறது. 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்  இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பீதியும் உள்ளதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ, அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் 25,000-த்திற்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.