1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Human right commision investigate kaniyamur student case

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் - கனியாமூர் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

Human
கள்ளகுறிச்சி மாவட்டம் கனியாமூர்  தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இந்த வழக்கின் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஒருபக்கம் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமான மனைவி: குழந்தை பிறந்ததும் கொலை செய்த கொடுமை!