1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Human body parts in building construction

வீடு கட்ட தோண்டியபோது கிடைத்த மனித உடலின் பாகங்கள்: ‘பாபநாசம்’ பாணியில் கொலையா?

கொலை
வீடுகட்ட தோண்டியபோது மனித உடலின் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்த நிலையில் பாபநாசம் பட பாணியில்  கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கோவை அருகே அன்னூர் என்ற பகுதியில்  வீடு கட்டுவதற்காக  பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் அப்போது அங்கு துர்நாற்றம் வீசுவதை அடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு என்ஜினியர் தகவல் கொடுத்தார். 
 
காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மனித உடல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர்  மனித உடலை தூக்கி எறிந்து விட்டு சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக புதைக்கப்பட்ட நபரின் உடல் யாருடையது என கண்டுபிடிக்க முயற்சிகள் உள்ளனர்.  
 
இந்த நிலையில் கொத்தனார் பணி மேற்கொண்டு வந்த அசோக்குமார் என்பவர் 10 நாளாக காணவில்லை என்பதால் ஒருவேளை கொலை செய்யப்பட்டது அவராக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம்.! வானதி சீனிவாசன்.!!