திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (15:17 IST)

தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை: கடலூரில் சோகம்

கடலூர் திட்டக்குடியில், தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தூக்கில் தொங்கி  தற்கொலைசெய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலர் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்

 
இந்த நிலையில் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கவனம் ஈர்த்த கோபிகிருஷ்ணன் நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிலர் அவரை தாக்கியதாக தெரிகிறது.
 
இந்த தாக்குதலால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran