தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ்: ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்
- கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் – வீடுகளை காலி செய்ய சொல்கிறார்களா உரிமையாளர்கள் ?
- கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்: அமைச்சர் அறிவிப்பு
- வீட்டுக்கு வீடு குவார்ட்டர் கொடுங்கள்: மன்சூர் அலிகான்
- சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!
வீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்கலாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் சூப்பர் ஐடியா !
கொரோனா வைரஸ் காரணமாக சானிட்டைசர்களின் விலை அதிகமாகியுள்ள நிலையில் வீட்டிலேயே எளிதாக கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிருமிநாசினிகள் மற்றும் முகமூடிகளின் விலை அதிகமாகியுள்ளது, மற்றும் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டிலேயே எளிதாக எப்படி கிருமிநாசினி தயாரிப்பது என்பதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி ‘“320 கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும், சிறிதுநேரத்தில்பிளீச்சிங் பவுடர் அடியில் தங்கவும் தெளிந்த நீரை சேமித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒன்பது லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம்.இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு ஒன்பது லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
