செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (18:07 IST)

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்: அமைச்சர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்
வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்டும் என தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து வந்திருப்பதாகவும் அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு இருக்குமென சந்தேகப்படுபவர்களின் வீடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுள்ளார் 
 
இது குறித்து அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட்டின் வெளியே சென்னை மாநகராட்சியால் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.