1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. How eradication of counterfeit notes? - Twelveth Std. Student's Super Idea!

கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? - +2 மாணவர்களின் சூப்பர் ஐடியா!

கள்ளப் பணம்
கள்ள நோட்டுகளை எந்த வகையில் ஒழிக்க முடியும் என்பது குறித்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்த யோசனையை பத்திரிக்கையாளர் ஞானி பகிர்ந்துள்ளார்.


இது குறித்து ஞானி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சில மாதங்களுக்கு முன்பு பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடலின்போது, சரியான வகையில் பண பரிவர்த்தனையை செயல்படுத்துவது என்பது குறித்து சிறந்த வழிமுறையை அவர்கள் தெரிவித்தனர். மற்ற வணிகப் பொருட்களுக்கும் காலக் கெடு [Expiry date] இருப்பது போல, ரூபாய் நோட்டுக்கும் காலக் கெடு அச்சிடப்பட வேண்டும்.

காலக்கெடு முடியும்போது வேறு நோட்டுக்கள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தவிர்க்க முடியாதபடி பணி பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
About Writer
லெனின் அகத்தியநாடன்
அடுத்த கட்டுரையில்
ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது : ரிசர்வ் வங்கி அளிக்கும் முக்கிய தகவல்கள்