செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:18 IST)

இந்து சமய அற நிலையத்துறை பெயரை மாற்ற வேண்டும்- திருமாவளவன்

இந்து சமய அற நிலையத்துறையை சைவவ அற நிலையத்துறை என்றும் வைணவ சமய அற நிலையத்துறை என்றும் பிரித்திட வேண்டும் என்று  விசிக தலைவர் தொல், திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மதுரை மாமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் அவர்களின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன். அப்போது அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்து சமய அறநிலையத் துறையை

சைவ சமய அறநிலையத் துறை என்றும் வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் ..என உரையாற்றினேன்.  இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது. சனாதனம் வர்ணாஸ்ரமம் மனுதர்மம் என்பன பார்ப்பனியமே என்று தெரிவித்துள்ளார்.

Edited  by Sinoj