ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (16:58 IST)

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, சற்று முன் வரை 330 ரன்கள் எடுத்துள்ளது.
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 56 ரன்கள் எடுத்தார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா ஆறு ரன்களும், சுப்மன் கில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
 
அதை தொடர்ந்து விராட் கோஹ்லியும் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனை அடுத்து கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஓரளவு விளையாடினாலும் அடுத்தடுத்த இருவரும் அவுட் ஆகினர்.

இந்த நிலையில், ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி, வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். சற்று முன் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா 83 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சதம் அடித்த அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva