வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (17:56 IST)

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில், இன்றைய ஆட்ட நேரத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 339 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்தபோதிலும், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றமளித்தனர். 
 
இதைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 36 ரன்களும், கே எல் ராகுல் 16 ரன்களும் எடுத்த நிலையில், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். 
 
ஜடேஜா 117 பந்துகளில் 86 ரன்களும், அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்களும் எடுத்து, இந்தியாவின் ஸ்கோரை 300க்கும் அதிகமாக உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 339 ரன்கள் எடுத்துள்ள நிலையில், நாளையும் ஜடேஜா மற்றும் அஸ்வின் விளையாடுவார்கள் என்பதும், ஜடேஜா நாளை சதம் அடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran