தொடர்புடைய செய்திகள்
- பள்ளிக்கூடம் போக பஸ்ஸில் ஏறிய பாம்பு: மாணவர்கள் ஓட்டம்
- தாயுடன் சேர்ந்து மகளையும் கடத்தி பலாத்காரம்: வேன் டிரைவர் கைது
- கல்லூரிகளுக்கே தேடிவரும் லைசென்ஸ் – தமிழக அரசின் புதிய திட்டம்
- எஸ்ஆர்எம் கல்லூரியில் 3 தற்கொலைகள்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
- பலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட ஆசிரியர்!!
அரசுப்பள்ளியிலும் ஹிந்தி திணிப்பு – வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !
அரசுப்பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசுப்பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பயோமெட்ரிக் மற்றும் கணினிகள் மூலமாக வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல பள்ளி முடிந்து செல்லும் போது கைவிரல்களை வைத்து பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும்.
இந்த பயோமெட்ரிக் எந்திரங்களில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிநடத்தும் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன. ஆனால் இப்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹிந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியானப் புகைப்படங்களுக்கு கடுமையானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
