1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (15:13 IST)

பலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட ஆசிரியர்!!

தாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத அலங்காரங்களுடன் பள்ளிக்கு செல்கிறார். 
தாய்லாந்த் நாட்டின் ரட்சாபுரி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் தீராபோக் மீசத். இவர் தினமும் பள்ளிக்கு, ஆசியர்களுக்கான சீருடையை அணிந்து வித விதமான அலங்காரங்களையும் செய்துக்கொண்டு செல்கிறார். 
 
ஆண் ஆசிரியராக இருந்தும் பெண்களை போல் மேக் அப், நீளமான  கூந்தல் ஆகியவற்றி வைத்து தன்னை அலங்காரப் படுத்திக்கொள்கிறார். வகுப்பறைக்கு இவ்வாறு அலங்காரத்துடன் செல்வதால் மாணவர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப்போய் உள்ளது. 
மேலும் நகைச்சுவையுடன் கூடிய அவரது வகுப்பை ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். ஆசிரியர் இவ்வாறு பாடம் நடத்துவது அற்புதமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.