ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (11:45 IST)

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் - ஹைலைட்ஸ்!

மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

 
சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவற்றில் முக்கியமானவை சில இங்கு... 
 
1. பள்ளி மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும்
 
2. பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பி கேமராக்கள் பொருத்தப்படும்
 
3. பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க பயிற்சி
 
4. மாணவிகளுக்கு நிர்பயா நிதி மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்
 
5. சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்வு
 
6. வார்டு மேம்பாட்டு நிதிக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு
 
7. பொதுமக்கள் சுலபமாக சொத்துவரி செலுத்தும் வகையில் QR Code அறிமுகப்படுத்தப்படும்.