1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (10:42 IST)

சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்

சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது. 

 
சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. 6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்கிறார். 
 
சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு புது வசதிகள் செய்து தரும் வகையில் புதிய திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் பிரியா அனுமதி தரவில்லை என கூறி வெளிநடப்பு.