வடகொரியாவில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் முக்கிய நிபந்தனைகள்..!
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வடகொரியாவில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை கருத்தில் கொண்டு, மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த காலத்தில், வடகொரியாவுக்கு ஏராளமான மக்கள் சுற்றுலா பயணம் செய்தனர். குறிப்பாக சீனர்களின் பங்கே அதிகமாக இருந்தது. ஆண்டுக்கு மூன்று லட்சம் சீனர்கள் வடகொரியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva