திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (17:17 IST)

மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தின் முழு விபரங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவியேற்றதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்றும் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என்றும் பிரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதாக இன்று தமிழக முதல்வர் அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 150 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வேலூர் மாவட்டத்தில் 13 சட்டசபை தொகுதிகளும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் இருந்ததால், நிர்வாக வசதி என்பது பெரும் கடினமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முடிவு செய்த தமிழக அரசு இன்று அதுகுறித்த அறிவிப்பை முறைப்படி அறிவித்தது
 
மூன்றாக பிரிக்கப்பட்டன வேலூர் மாவட்டம் எந்தெந்த தாலுகாக்களில் எந்தெந்த மாவட்டங்களில் வரும் என்பது குறித்த உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது அதை தற்போது பார்ப்போம்
 
வேலூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்: 1) வேலூர் 2) அணைக்கட்டு 3) குடியாத்தம் 4) கே.வி.குப்பம் 5) காட்பாடி 
 
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் வரும் தாலுக்காக்கள்: 1) அரக்கோணம் 2) காவேரிபாக்கம் 3) வாலாஜா 4) ராணிப்பேட்டை 5)ஆற்காடு 
 
திருப்பத்தூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்: 1)பேர்னாம்பட்டு 2)ஆம்பூர் 3)வாணியம்பாடி 4)திருப்பத்தூர் 5)நாற்றம்பள்ளி