மோடி பிரதமர் ஆகாவிட்டால் இந்தியாவுக்கே ஆபத்து: பிரபல நடிகை

Last Modified சனி, 30 மார்ச் 2019 (21:02 IST)
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நாட்டுக்கே ஆபத்து என எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து என்று பிரபல நடிகை ஹேமாமாலினி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் நடிகை ஹேமமாலினி தற்போது தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹேமாமாலினி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அவரை தவிர வேறு யார் வெற்றி பெற்று பிரதமர் ஆனாலும் அது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும் என்றார். மேலும் நாட்டில் ஊழலே இல்லை என்பதை பிரதமர் மோடி உறுதிபடுத்தி இருக்கிறார் என்றும் ஹேமாமாலினி கூறியுள்ளார்.
hemamalini
ஹேமாமலினியின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும் கலாய்க்கப்பட்டும் வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :