1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. helmet compulsory in karur district

ஹெல்மெட் அணியாமல் வந்தால் மது கிடையாது: அதிரடி அறிவிப்பு

helmet
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கரூர் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித சேவையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
இந்த கூட்டத்தில்  அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு வரும்  இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் உதவும்: மேயரிடம் உறுதியளித்த தூதுவர்!