வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (11:29 IST)

குறைந்த பேருந்து சேவைகள்! – ரயில்களில் குவிந்த மக்கள்!

மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் பேருந்துகள் இல்லாததால் மக்கள் ரயில்களில் குவிந்துள்ளனர்.

மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து குறைந்துள்ளதால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 32 சதவீதம் பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ளூர், புறநகர் பேருந்து சேவைகள் குறைந்ததால் மக்கள் மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.