1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (11:16 IST)

தூத்துக்குடி - சென்னை இடையே கோடை விடுமுறைக்கு புதிய விமான சேவை!

கோடை காலம் நெருங்கி வருவதால் பொது மக்கள் வசதிக்காக தூத்துக்குடி, சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் சிறப்பு விமானம் இயங்கவுள்ளது. 
 
இந்த விமானம் வருகிற 1-ந்தேதி முதல் தொடர்ச்சியாக கோடைகாலம் முழுவதும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. 
 
தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.