திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (12:59 IST)

பைக் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என கோவை மாநில போக்குவரத்து காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
சென்னையில் ஏற்கனவே பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக கோவையில் வரும் 26ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னர் அமர்ந்து செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவை மாநகரில் கடந்த மே மாதத்தில் சாலை விபத்துகளால் 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்து இருப்பதால் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran