1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (11:11 IST)

தமிழக அரசின் முடிவால் பைக், கார் விலை உயர்கிறது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழகத்தில் சாலை வரை உயர்த்தப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இதன் காரணமாக கார்கள் மற்றும் பைக்குகள் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான வாகனங்களுக்கு 10% வரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்களுக்கு 12% வரியும் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
 
மேலும் 5 லட்சத்துக்கு குறைவான கார்களுக்கு 12 சதவீதம் வரியும் 5 முதல் 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீத வரியும் 10 முதல் 20 லட்சம் வரையிலான கார்களுக்கு 15% வரியும் 20 சதவீதம் மேல் உள்ள வாகனங்களுக்கு 20% வரியும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த வரி உயர்வு காரணமாக பைக்குகளின் விலை 10 ஆயிரம் முதல் 15,000 வரை அதிகரிக்கும் என்றும் அதேபோல்  கார்களின் விலை 50 ஆயிரம் வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran