வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (14:58 IST)

வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு வரம்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை: போக்குவரத்து காவல்துறை

traffic camera
வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 
 
வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு என்பது 40 கிலோ மீட்டர் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இந்த அறிவிப்புக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனை அடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
அந்த விளக்கத்தில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டு வரம்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஆய்வுக்காக மட்டுமே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வேகத்தை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு சாலைகளில் உள்ள வேகங்கள் கணக்கிடப்பட்டு வேக கட்டுப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இறுதி முடிவு எடுக்கும் வரை பொருத்தப்பட்டுள்ள 10 கேமராக்கள் அனுப்பும் தகவல்கள் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது முட்ட புள்ளி
 
Edited by Siva