கோவையில் 8 வினாடிகள் நில அதிர்வா? பொதுமக்கள் அச்சம்
கோவை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன்னர் கோவை அன்னூர் பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. இதனால் சுமார் 8 வினாடிகள் பூமியே அதிர்ந்தது.
இடியினால் ஏற்பட்ட இந்த அதிர்வை நில அதிர்வு என நினைத்து பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அன்னூர் பகுதியில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என்றும், இடியினால் அந்த பகுதி அதிர்ந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.