செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:45 IST)

அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

அசாமில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.