1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rainfall Warning Issued for 33 Districts in Tamil Nadu

இன்று காலை 10 மணி வரை 33 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Weather
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட 33 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்..!