புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (12:47 IST)

தளபதி தேநீர் விடுதி.. ஏழை பெண்ணுக்கு தொழில் அமைத்து கொடுத்த தவெக தொண்டர்கள்..!

சென்னையைச் சேர்ந்த ஏழைப் பெண் தனக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் நிதி திரட்டி அந்த பெண்ணுக்கு தேநீர் கடை வைத்து கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு சமூக சேவை செய்து வருகின்றனர் என்பதோடு, குறிப்பாக ஏழை எளிய மக்கள் கேட்கும் உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அந்த பெண்ணுக்கு டீக்கடை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் உதவி செய்துள்ளனர். இந்த டீக்கடையை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் திறந்து வைத்து, முதல் டீயை போட்டுக் கொடுத்தார்.

புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து அவரே பால் ஆற்றி டீ தயாரித்து விற்பனையை தொடங்கி வைத்ததோடு, இந்த தொழில் மென்மேலும் வளர வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து, அந்த பெண் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran