வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (22:25 IST)

20 ரூபாய் டாக்டர் திடீர் மரணம்: கண்ணீர் விட்ட பொதுமக்கள்

டாக்டர் தொழில் என்றாலே சேவை மனப்பான்மையுடன் உள்ள தொழில் என்று இருந்த நிலையில் அந்த தொழில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி 'ரமணா' படத்தில் வருவது போன்று பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் ஒருசில சம்பவங்கள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் டாக்டர் தொழிலை முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் செய்து வந்த 76 வயது ஜெகன்மோகன் என்ற டாக்டர் இன்று காலமானார். 1975ஆம் ஆண்டு வெறும் இரண்டு ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த இந்த டாக்டர் நேற்று வரை நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம் வெறும் ரூ.20தான். சென்னை மந்தைவெளியில் சந்திரா கிளினிக் என்ற பெயரில் டாக்டர் தொழிலை செய்து வந்த டாக்டர் ஜெகமோகன் இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் காலமானார்.

டாக்டரின் மறைவுச்செய்தியை அறிந்து மந்தவெளி பகுதியே சோகமானது. மக்கள் அவருடைய உடலை பார்த்து கண்ணீர்விட்ட காட்சி, அவர் டாக்டர் தொழிலை எந்த அளவுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்திருந்தார் என்பதை நிரூபித்துள்ளது.