Last Updated:
வியாழன், 4 அக்டோபர் 2018 (08:11 IST)
இலங்கையில் ஒரே இடத்தில் 150 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக குழியை தோண்டிய போது அதில் குவியலாக பிணங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் வேரெங்கும் பிணக்குவியல் இருக்கிறதா? என்பதை அறிய பல இடங்களில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று ஒரு இடத்தில் குழி தோண்டியபோது 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது இலங்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.