1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain with Thunderstorms in 8 Districts Until 10 AM: Weather Alert!

இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீப காலமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக அதிக மழை பெய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரை தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது,


Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகம்..!