தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
- நானே களத்தில் இறங்கி போராடுவேன்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
- இன்று இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை
- நவம்பர் 20,21-ல் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!
- நாளை முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
நவ.21,22ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ்!
நவ.21,22ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ்!
நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் 20ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் நவம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு நாளும் கனமழைக்கு மட்டுமே வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
