1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:44 IST)

சென்னையில் விடிய விடிய மழை: சாலைகளில் வெள்ளம்

rain
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதாகவும் விடிந்த பின்னரும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
பால் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருப்பதாகவும் சாலைகளில் வாகனங்கள் குறைவாக பயணம் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இன்று இரவு சென்னை அருகே புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னைக்கு நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva