1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (18:53 IST)

மாண்டஸ்’ புயல் எதிரொலி : மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

marina
மாண்டஸ்’ புயல் எதிரொலி : மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்
 புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் இந்த புயல் நாளை இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மிக உயரமாக கடல் அலைகள் எழுந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கடற்கரையில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரையில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்னும் ஓரிரு நாட்களுக்கு கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran