1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. heavy rain in chennai for two days

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை: வானிலை அறிவிப்பு!

சென்னை
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இன்று காலை அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும், இதன் காரணமாக சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva