மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்: பாரிவேந்தர் மீதான வழக்கு ரத்து!
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உரிமையாளர் பாரிவேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பாரிவேந்தர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் தரப்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக ரூ.84 கோடி மோசடி செய்தாக பாரிவேந்தர் மற்றும் மதன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் தரப்பில் ரூ.89 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.