தொடர்புடைய செய்திகள்
- மழை காலத்தில் வரும் நோய்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
- தவெக மாநாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டால்.. 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்..!
- வலுபெறும் ‘டானா’ புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!
- புதுவையில் திடீரென உள்வாங்கிய கடல்.. ‘டானா’ புயல் காரணமா?
- வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல்! ரெட் அலெர்ட் எச்சரிக்கை!
அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில், இன்னும் இரண்டு மணி நேரங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம், டானா புயலாக மாறி, நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட தமிழக முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்னும் இரண்டு மணி நேரத்தில், தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva
